Regional02

ஆசிரியர்கள் கூட்டத்தில் அவதூறு பேசிய பட்டதாரி ஆசிரியர் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி சிஇஓ குறித்து ஆசிரி யர்கள் கூட்டத்தில் அவதூறாகப் பேசிய பட்டதாரி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அருண். இவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது, பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தார். கடந்த 26-ம் தேதி பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் கூட்டத்தில், சிஇஓ குறித்து அவதூறாகக் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக 27-ம் தேதி அனைத்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கினர். பட்டதாரி ஆசிரியர் அருண், அவதூறாக பேசியது உண்மை என ஒப்புக்கொண்டார்.

இச்செயல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973-ன்படி, உயர் அலுவலரை அவதூறாகப் பேசி, பணிக்கு களங்கம் ஏற்படுத்தியதால், ஆசிரியர் அருண், தேன்கனிக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள கணித பாட பட்டதாரி ஆசிரியராக நிர்வாக மாறுதல் செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT