Regional02

மணல், கிரானைட் கல் கடத்திய லாரிகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் முத்து மற்றும் அதிகாரிகள், குருபரப்பள்ளி - தீர்த்தம் சாலையில் உள்ள குப்பச்சிப்பாறை பஸ் ஸ்டாப் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 2 லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடினர். சோதனை செய்ததில், தீர்த்தம் ஆற்றில் இருந்து தலா 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதேபோல் இக்குழுவினர் பர்கூர் - பசவண்ணகோயில் சாலை யில் கொட்டிலேட்டி என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த 2 லாரிகளின் ஓட்டுநர்கள் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினர். அதில், அரசு அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். புகார்கள் தொடர்பாக குருபரப்பள்ளி, பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT