வடகிழக்கு பருவ மழை காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தும், குறைவதுமாக உள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,926 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,126 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 100.55 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 100.93 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 66.05 டிஎம்சி-யாக உள்ளது.