Regional02

பந்தல் அலங்கார உரிமையாளர் சாவில் மர்மம் என புகார்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ்.காலனி அருகே உள்ள சிராஜ் நகரைச் சேர்ந்தவர் வி.மணிகண்டன்(43). இவர், யாகப்பா நகரில் பந்தல் அலங்கார மையம் நடத்தி வந்தார்.

இவர், மருத்துவக் கல்லூரி சாலை அருகேயுள்ள கூட்டுறவு காலனியில் வசிக்கும் அக்குபங்சர் சிகிச்சை அளிக்கும் கவிதா என்பவரின் வீட்டு மாடியில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மணிகண்டனின் மனைவி நித்யா தெற்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மணிகண்டனுக்கும், கவிதாவுக்கும் இடையே நீண்ட காலமாக கூடாநட்பு இருப்பது தெரிய வந்ததால், மணிகண்டன் இறப்பு குறித்து கவிதாவிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மணிகண்டனின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மணிகண்டனின் சடலத்தை உறவினர்கள் நேற்று மாலை வாங்கிச் சென்றனர்.

SCROLL FOR NEXT