சங்கரன்கோவிலில் நடந்த அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் வி.எம். ராஜலெட்சுமி, கடம்பூர் ராஜு பங்கேற்றனர். 
Regional01

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

செய்திப்பிரிவு

சங்கரன்கோவிலில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ராஜலெட்சுமி பேசும்போது, “பெண்கள் வாழ்க்கையில் முன்னேற பல திட்டங்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. அவரது வழியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் பழனிசாமி, தொடர்ந்து பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகமீண்டும் வெற்றி பெற பெண்கள் பாடுபட வேண்டும்” என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறாது. சங்கரன்கோவில் தொகுதியில் 11 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் 2 முறை மட்டுமே திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அதிமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT