தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர். 
Regional02

அண்ணாமலையார் கோயிலில் தெப்பல் உற்சவம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்பல் உற்சவம், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது நாளான இன்று இரவு பராசக்தி அம்மன் உற்சவம் மற்றும் நாளை இரவு முருகர் உற்சவம் நடைபெற உள்ளது. சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மகா தீபத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT