'நிவர்' புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி அபிநவ் பாராட்டு சான்று வழங்கினார். 
Regional01

தன்னார்வலர்களுக்கு கடலூர் எஸ்.பி பாராட்டு

செய்திப்பிரிவு

'நிவர்’ புயலின் தாக்கத்தின் போதுமுன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கடலூர் புதுநகர், தேவனாம் பட்டினம், கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர், ரெட்டிச்சாவடி, தூக்கணாம் பாக்கம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் 165 தன்னார்வ இளைஞர்கள் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பாக செயல்பட்ட தன் னார்வ இளைஞர் களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் பாராட்டு சான்று வழங் கினார்.

கடலூர் டிஎஸ்பி சாந்தி,டிஎஸ்பி (பயிற்சி) ராஜபிரியா, இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் ரவி, ராஜாங்கம்,சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT