Regional01

மக்கள் மீது அரசு வழக்கறிஞர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

அரசு வழக்கறிஞர்கள் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தெரிவத்தார்.

உயர் நீதிமன்றக் கிளை மத்திய அரசு வழக்கறிஞர்கள் சார்பில் அரசியலமைப்பு தினவிழா மதுரையில் நடந்தது.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் எல்.விக்டோரியா கவுரி தலைமை வகித்தார். மத்திய அரசின் வழக் கறிஞர்கள் ஜெயசிங், அழகு ராம் ஜோதி, மதி முன்னிலை வகித் தனர். லஷ்மணன் வரவேற்றார். நீதிபதி என்.புகழேந்தி பேசினார்.

நீதிபதி என்.சேஷசாயி பேசும் போது, வழக்கறிஞர்கள் உதவி மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். விசாரணை யின்போது நீதிபதிகள் திருப்தியடையும் வகையில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும். அரசு வழக்கறிஞர்கள் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

மதுரையில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் நடத்திய அரசியலமைப்புச் சட்ட தின விழாவில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி. படம்: ஆர்.அசோக்.பார் கவுன்சில் உறுப்பினர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT