இதில் அவரது மகன் தீரஜ் (12), மகள் நிதி (8) பெயர்களில் எல்.ஐ.சியில் தலா ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. எஞ்சிய தொகையில் மனைவி ராதா பெயரில் கனரா வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.2,87,479-ம் மற்றும் பழனிவேல்நாதனின் தாயார் நாகேஸ்வரி, தந்தை கணேசன் ஆகிய இருவரிடமும் ரொக்கமாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
இதுதவிர, ராதா மற்றும் 2 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஆண்டுக்கான தனியார் இன்சூரன்ஸ் மருத்துவக் காப்பீட்டுப் பத்திரமும் காவல்துறை உதவும் கரங்கள் குழு மற்றும் மதுரை மாநகர் உதவும் கரங்கள் நண்பர்கள் சார்பில் நேரில் வழங்கப்பட்டது