Regional01

மதுரையில் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற சென்னை மாணவர் கிணற்றில் மூழ்கி மரணம்

செய்திப்பிரிவு

மதுரையில் காவலர் தேர்வுக்கு பயிற்சிபெற்ற மாணவர் கிணற்றில் மூழ்கி மரணம் அடைந்தார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் காம ராஜ் (21). இவர் காவல் பணி யில் சேர, மதுரை தனியார் கல்லூரியில் நடக்கும் இலவச பயிற்சி முகாமில் சேர்ந்து படித்து வந்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த அவர், நேற்று பிற்பகல் பாம்பன் நகர் கண்மாய் கரை கிணற்றில் குளிக்க, அவனியாபுரத்தைச் சேர்ந்த 2 நண்பர்களுடன் சென்றிருந்தார். கிணற்றுக்குள் இறங்கி குளித்தபோது, எதிர் பாராதவிதமாக காமராஜ் நீரில் மூழ்கினார். பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரது உடலை மீட்டனர்.இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT