இதையொட்டி காலை 6 மணியில் இருந்து இரவு வரை பல்வேறு பூஜைகளும், காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடந்தன. காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பால விநாயகர், பாலமுருகன், சந்தன மாரியம்மன், காமாட்சி அம்மன், விசாலாட்சி அம்மன், மகாலட்சுமி, துர்க்கை அம்மன், சிம்மம், பலி பீடம், மார்நாடு கருப்பசாமி விக்கிரகங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகாலட்சுமி நகர் குடியிருப்போர் சங்கத்தினர், பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்தனர்.