சேலம் சின்னதிருப்பதியில் மாணவரை நாய் கடித்த புகாரில் நாயின் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் சின்னதிருப்பதி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் விக்னேஷ் (17) கல்லூரி மாணவர். இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர் பிரபாகர் (36). இவர் வளர்க்கும் நாய் அடிக்கடி பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை குரைத்து அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில், விக்னேஷை நாய் கடித்தது. இதில், காயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக அசோக்குமார், பிரபாகரிடம் கேட்டபோது, பிரபாகர் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், கன்னங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரபாகரை கைது செய்தனர்.