Regional02

100 சதவீதம் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

100 சதவீதம் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நுண்ணீர் பாசன அமைப்பு களை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானிய மும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப் படுகிறது. குழாய் கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில், 50 சதவீதம் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாயும், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு 50 சதவீதத் தொகை ரூ.15 ஆயிரம் மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசனக் குழாய் அமைப்பதற்கு 50 சதவீதத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவியாக ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.

SCROLL FOR NEXT