Regional01

கொலை வழக்கில் கைதான 12 பேர் மீது குண்டர் சட்டம்

செய்திப்பிரிவு

கரூரில் கோவை சாலையில் டான்சி எதிரே இளநீர் வியாபாரி கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி(25) கடந்த செப்.18-ம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப் பட்டார். இவ்வழக்கில் ரமேஷ்(38), அஜித்(23), கோகுலகிருஷ்ணன்(21), துரைப் பாண்டி(22), மணிகண்டன்(21), பிரேம்குமார்(23), தமிழரசன்(25), செந்தில் ஈஸ்வரன்(21), கலைச்செல்வன்(19), விமல் பஷீர்(22), அரவிந்த்(27), கேசவன்(20) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் 12 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க காவல் கண்காணிப்பாளர் பொன்.பகலவன் பரிந்துரையின்பேரில், ஆட்சியர் சு.மலர்விழி உத்தரவிட்டதை அடுத்து, 12 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT