வைகுண்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவலர்களின் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. 
Regional01

வைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வைகுண்டம் பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு வைகுண்டம் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

அணிவகுப்பில் வைகுண் டம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் வைகுண்டம் துணை கோட்ட 12 எஸ்ஐகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காவல்துறை சார்பில் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, இதில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு காவலர் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். இதுபோல் ஆழ்வார்திருநகரியில் ஆர்.கே.ஆர் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமையும் எஸ்பி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் ஆழ்வார்திரு நகரி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், எஸ்ஐகள் சுரேஷ்குமார், ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஆர்கேஆர் அகாடமி நிறுவனர் பரியேறும் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT