கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 560 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. சிறிய மதகுகள் வழியே தென்பெண்ணை ஆற்றில் சீறிப் பாய்ந்து வெளியேறும் தண்ணீர். 
Regional02

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால்,கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

‘நிவர்’ புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 682 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 560 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT