மதுரை மீனாம்பாள்புரம் கால்வாயில் ஓடும் கழிவுநீரால் எழும்பிய ரசாயன நுரை. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
Regional01

குடியிருப்புக்குள் கழிவு நீர் நுரை

செய்திப்பிரிவு

மதுரை நகரில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.

செல்லூர் கண்மாயில் இருந்து செல்லும் கால்வாயில் நுரை பொங்கி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட குடி யிருப்புகளுக்குள் பரவியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் தேங்கி யிருந்த ஆகாயத் தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தி தண்ணீர் செல்ல வழியேற் படுத்தினர். இதற்கிடையே மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலை வர் கார்த்திகேயன் செல்லூர் கால்வாயில் நுரை பொங்கி வருவதை கள ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், செல்லூர் கண்மாயை முறையாகத் தூர் வாரவில்லை எனக் குற்றம் சாட்டி னார்.

SCROLL FOR NEXT