Regional01

புயல் பாதிப்பில் இருந்து பயிரை காக்க வேளாண்மை அதிகாரி யோசனை

செய்திப்பிரிவு

நவ.29, 30 தேதிகளில் தென் தமிழகப் பகுதிகளில் புயல் மற்றும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிரைப் பாதுகாக்க மதுரை மாவட்ட விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதியில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீரை வடிகால் வசதி செய்து வெளியேற்ற வேண்டும். முதிர்ச்சி அடைந்த தேங்காய் மற்றும் இளநீர் காய்களை பலத்த காற்று வீசுவதற்குள் அறுவடை செய்வதுடன், தென்னை மரத்தின் தலைப்பகுதியில் கீழ்ப்பகுதியிலுள்ள அதிக எடையுள்ள ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். மழை பெய்யும் நாட்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம். இருபோக சாகுபடியில் அடுத்த பருவத்தில் மழை மற்றும் வெள்ளத்தைத் தாக்குப்பிடிக்கும் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT