விருதுநகர் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தங்கம் தென்னரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
காரியாபட்டி அருகே உள்ள அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந் துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தங்கம் தென்னரசு எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுக்கப்படும் என்றார்.
அப்போது திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.செல்லம், கா.கண்ணன், ஆர்.கே.செந்தில், மாவட்டக் கவுன்சிலர் தமிழ்வாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.