Regional02

தூத்துக்குடியில் நாளை முதல் மக்கள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலம் குறைகளை தெரிவிக்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.30) முதல் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். பொதுமக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்தவாறு குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலைநாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியரால் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புகைச் சீட்டு பெறுவதோடு, காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியரிடமும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். குறைகளை தெரிவிக்க வரும்பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மக்கள் குறைகளை தெரிவிக்க ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி காலை10 - 10.20 மணி, வைகுண்டம் 10.20 - 10.40, ஏரல் 10.40. - 11.00,திருச்செந்தூர் 11 - 11.20, சாத்தான்குளம் 11.20 - 11.40, விளாத்திகுளம் 11.40 - 12, ஓட்டப்பிடாரம் 12 - 12.20,கயத்தாறு 12.20. - 12.40, கோவில்பட்டி 12.40 - 1, எட்டயபுரம் 1 - 1.20என்ற நேரப்படி பொதுமக்கள் மனுக்களை அளித்து மாவட்ட ஆட்சியர்மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT