Regional02

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் போலீஸார், சைல்டுலைன் அமைப்பினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கோயிலில் நேற்று அதிகாலை திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த சைல்டுலைன் அமைப்பினர் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய போலீஸார் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், அவர்களிடம் எழுதி பெற்று அனுப்பி வைத்தனர்.

மற்றொரு திருமணம்

SCROLL FOR NEXT