‘நிவர்’ புயலைத் தொடர்ந்து மரக்காணம் அருகே மீனவர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறியும் பாஜக மாநிலத் தலைவர் முருகன். 
Regional01

மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் பாஜக மாநிலத் தலைவரிடம் கோரிக்கை

செய்திப்பிரிவு

மரக்காணத்தில் நேற்று முன்தினம் இரவு ‘நிவர்’ புயல் கரையைக் கடந்தது. புயல் பாதிப்பை பார்வையிட பாஜக மாநிலத் தலைவர்முருகன் நேற்று மரக்காணம் அருகே வசவன்குப்பம் கிராமத் திற்கு சென்று, அங்குள்ள மீனவர் களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது வசவன்குப்பம் பகுதி மீனவர்கள், “மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடித் துறைமுகம் இல்லை. இப்பகுதியில் அமைக்க வேண் டும். கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கவேண்டும்” உள்ளிட்ட கோரிக் கைகளை வைத்தனர். இக்கோரிக் கைகளை தமிழக முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச் சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற நடவ டிக்கை எடுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் அவர்களிடம் உறுதியளித்தார்.

தொடர்ந்து அப்பகுதி மீனவர் களுக்கு அரிசி உள்ளிட்ட நிவா ரணப் பொருட்களை அவர் வழங் கினார். அப்போது பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ராகவன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT