ரயில்வே உட்பட பொதுத் துறை நிறுவனங்களைத் தனி யார் மயமாக்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ, ஏஐஆர்எப் ரயில்வே தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்ஆர்எம்யூ கோட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் கோட்டச் செயலர் ரபிக், உதவிக் கோட்டச் செயலர் ராம் குமார், எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர்கள் பிரிவு கோட் டச் செயலர் அழகுராஜா உட் பட பலர் கலந்து கொண்டனர்.