மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.1.11 கோடி முறைகேடு புகாரில் அதே வங்கி அதிகாரி உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர்களின் 2,162 கிராம் அடகு நகைகள் மூலம் ரூ.1 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரத்து 910 முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.
இதில் பேங்க் ஆப் பரோடா வங்கி அதிகாரி பால கிருஷ்ணன், வங்கி ஊழியர் கோபாலகிருஷ்ணன், பைனான் சியர் குமாரபாண்டியன், சுப்பிர மணியபுரத்தைச் சேர்ந்த ஹரிகர புத்திரன், முத்துக்குமார், வளர்மதி, திவ்யா, லட்சுமி, அருண்குமார் ஆகிய 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வங்கியின் மண்டல மேலாளர் சுதாகரன் அளித்த புகாரின்பேரில் விளக்குத் தூண் போலீஸார் வங்கி அதிகாரி பாலகிருஷ்ணன் உட்பட 9 பேர் மீது முறைகேடு வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.