Regional01

சட்டப்பேரவை தேர்தலையொட்டி புதிய வாக்கு எண்ணும் மையம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

ஈரோடு சென்னிமலை சாலையில் அமைந்திருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2021 முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் ஈரோடு சென்னிமலை சாலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வாக்குப்பதிவு பெட்டிகளை வைக்கும் இருப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT