Regional02

தமாகா நிர்வாகிகள் ஆலோசனை

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், காந்திநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வரும் 29-ம் தேதி தமாகா 7-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடுவது, பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கவும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட கட்சித் தலைமையிடம் வேண்டுகோள் வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, அரசுப் பள்ளியில் படித்து மருத்துவம் படிக்கதேர்வான மாணவ, மாணவிகளுக்கும், உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் அளித்து உத்தரவிட்டதமிழக முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT