Regional02

எஸ்டிபிஐ கட்சி செயற்குழு

செய்திப்பிரிவு

எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முகம்மது இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT