Regional02

மணல் குவாரியில் எம்.பி. ஆய்வு

செய்திப்பிரிவு

ஊத்துக்குளி வட்டம் புத்தூர்பள்ள பாளையம் ஊராட்சியில் சொட்டைக் கவுண்டன்புதூர் பகுதியில் தனியார் மணல் குவாரியில், முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தனர்.

இதுதொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் பொதுமக்களும், மணல் ஏற்றியவர்கள் மீது சிலர் தாக்குதல்நடத்தியதாக குவாரி தரப்பினர் போலீஸாரிடமும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சுப்பராயன் நேற்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த அவர், இதுதொடர்பாக ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT