திருவள்ளூர் அருகே புதுபட்டுகிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(37). கார் ஓட்டுநரான இவருக்கு மனைவி பிரியங்கா(25), சசிதரன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி புதுபட்டுகிராமத்தில் ராஜா என்பவரின்வீட்டின் கதவை நாகராஜ் தட்டியதால் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சூழலில், நேற்று முன் தினம்,நாகராஜ், கடைக்குச் செல்வதாக கூறி, விட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, புதுபட்டு பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற நாகராஜை வழிமறித்த மர்மநபர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடினர். இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, மப்பேடு போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.