Regional01

மீனாட்சி அம்மன், அழகர்கோவில் யானைகளுக்கு கரோனா பரிசோதனை ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டதுமீனாட்சியம்மன் கோயில் யானைக்கு தடுப்பூசி போட்ட கால்நடை மருத்துவக் குழுவினர்.

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பதற்கு, கால்நடை பராமரிப்பு துறையினர் நேற்று தடுப்பூசி போட்டனர். மேலும் கரோனா பரிசோதனையும் செய்தனர்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் கோயில் யானைகளுக்கு மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பதற்கு கால்நடை பராமரிப்பு துறையினர் நேற்று தடுப்பூசி போட்டனர்.

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி மற்றும் அழகர்கோவில் யானை சுந்தரவள்ளி தாயார் ஆகிய யானைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராஜதிலகன் ஆலோசனையின் பேரில், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமலிங்கம், கங்காசூடன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கரோனா ரத்த பரிசோதனை, உடல்நலப் பரிசோதனை செய்தனர். யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பூசியும், மற்ற தடுப்பூசிகளும் போடப்பட்டன.

SCROLL FOR NEXT