மதுரையில் உள்ள கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் போலீஸாரிடம் சிக்கினார்.
மதுரை கூடல்புதூர் பனங்காடியில் பலசரக்குக் கடை ஒன்றில் நேற்று காலை ஒருவர், பொருட்களை வாங்கி விட்டு ரூ.500-ஐ கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டை சந்தேகித்த கடை உரிமையாளர் அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது, அவர் தப்பி ஓடினார். இதையடுத்து அவரை விரட்டிப் பிடித்தனர். தகவல் அறிந்தகூடல்புதூர் காவல் ஆய்வாளர் கதிர் மற்றும் போலீஸார் அந்நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஆனையூரைச் சேர்ந்த காதர்பாட்சா (50) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மேலும் மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணை யில் மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறி யதாவது: வெளியூரில் கள்ள நோட்டுகளை அச்சடித்து மது ரையில் புழக்கத்தில் விட ஒரு கும்பல் முயற்சிப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் 5 பேரைத் தேடி வருகிறோம் என்றனர்.