Regional01

ஏ.டிஎம்-ல் ரூ.60 ஆயிரம் நூதன திருட்டு

செய்திப்பிரிவு

உசிலம்பட்டி அருகே ஆரியப் பட்டியைச் சேர்ந்தவர் சந்திரா (49). இவர் கடந்த 12-ம் தேதி வாலாந்தூரிலுள்ள ஏடிஎம் மையத்துக்குப் பணம் எடுக்கச் சென்றார். அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சந்திராவுக்கு உதவி செய்வதாகக் கூறி கார்டை வாங்கினார். இயந்திரத்தில் கார்டை பயன்படுத்திய பின்பு பணம் வரவில்லை எனக் கூறி, கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே சந்திராவின் கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டு மூலம் ரூ.60 ஆயிரம் எடுக்கப் பட்டிருப்பது குறுந்தகவல் மூலம் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வாலாந்தூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மதுரைப்பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT