திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் ரூ.75 லட்சத்தில் தார்சாலை அமைப்பதற்காக பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ.வான திமுகவைச் சேர்ந்த சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த விவி.ராஜன் செல்லப்பா தலைமையில் இந்த பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அவர் தொடங்கிவைத்தார்.
தொகுதி எம்எல்ஏவை அழைக்காமல் வேறு தொகுதி எம்எல்ஏவை அழைத்து சாலைப் பணியைத் தொடங்கிவைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.