கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் சூரிய ஒளி பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 40 பழங்குடியினர், 4 ஆதிதிராவிடர், 25 பொதுப்பிரிவினர் என மொத்தம் 69 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நிர்வாக அனுமதி வழங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து தகுதியான 30 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி உத்தரவை கிருஷ்ணகிரி ஒன்றியக் குழு தலைவர் அம்சாராஜன் நேற்று வழங்கினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவா பேசும் போது, ‘‘அரசு அறிவித்துள்ள அளவில் வீடுகளைக் கட்ட வேண்டும். கூடுதலாக எந்த மாற்றங்களையும் செய்யக் கூடாது. வீடுகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும், என தெரிவித்தார்.