Regional01

கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

செய்திப்பிரிவு

சமுதாய நல்லிணக்கத்துடன் தேச ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் 2020-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப் பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில்(www.sdat.tn.gov.in) இருந்து விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் இன்றைக்குள்(நவ.26) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங் களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 9360870295 என்ற செல்போண் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT