நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல் வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பேரிடர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண் காணிப் பாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் 3 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 6 போலீஸாருடன் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
பொதுமக்கள் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக உதவிகளை பெறுவதற்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 9498101762 என்ற எண்ணிலும், tindisastercontrol@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.