Regional01

தேசிய திறனாய்வு தேர்வு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020-2021-ம் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ம் தேதி சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

தேர்வர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT