Editorial

எரிந்தழியும் காடுகள்நம்மையும் விரட்டும்

செய்திப்பிரிவு

ஒருபுறம் அமேஸான் காடுகள் எரிகின்றன என்றால் மறுபுறம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகள் எரிகின்றன. 2020-ல் இதுவரை 40 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அங்கு எரிந்திருக்கின்றன. இதற்கு முன்பு 2018-ல் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்ததே அங்கு உச்சம். அதைவிடத் தற்போது இரண்டு மடங்கு பரப்பளவு தீயால் நாசமாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வரலாற்றில் மிக மோசமான 6 காட்டுத் தீயில் 5 காட்டுத் தீ இந்த ஆண்டு அங்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், சில இடங்களில் காற்றில் புகை அதிகமாகக் கலந்து பல இடங்களில் சூரிய ஒளியை மறைக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. எங்கேயோ ஏற்படும் காட்டுத் தீதானே என்று நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது. ஏனெனில், இந்தக் காட்டுத் தீயால் வளிமண்டலத்தில் அதிக அளவு கார்பன் டையாக்ஸைடு கலப்பதால், அது பசுங்குடில் விளைவை அதிகப்படுத்தி, புவிவெப்பமாதலையும் அதிகப்படுத்தும். ஆக, எங்கோ பற்றிய நெருப்பின் சூடு நம்மையும் சூழும் நாட்கள் தொலைவில் இல்லை!

SCROLL FOR NEXT