Regional02

நிதி நிறுவன மோசடியில் மேலும் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி நிதி நிறுவன மோசடியில் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சியில் குழந்தை வேல், சம்சுதீன் மகள் ஜெயி லானி, செந்தில், குப்புசாமி மகள் அஞ்சலிதேவி ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த 2018 ல், தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். பணத்தை திருப்பி கொடுக்காமல் ரூ.20 லட்சம் மோசடி செய்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் குழந்தைவேலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர் புடைய செந்தில் (30) என்பவரை விழுப்புரத்தில் நேற்று போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜெயிலானி,அஞ்சலிதேவி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT