Regional01

சிவகங்கை மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சிவகங்கை மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடமாறுதல், தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி போன்றவற்றுக்கு லஞ்சம் பெறுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது ஊழியர் ஒருவர், தன்னிடம் இருந்த பணத்தை அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் வீசியதாகக் கூறப்பட்டது. போலீஸார் கழிவுநீர்த் தொட்டியில் தேடியும் பணம் சிக்கவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி வரை நடந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT