இதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்து, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்விக்கான சிறப்பு வழிகாட்டியை வெளியிட்டுப் பேசியதாவது:
மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு நவ.20 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். மழைக் காலம் என்பதால் மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 2 தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு ஆசிரியருக்கு ஒரு மரக்கன்று வீதம் நட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் கல்வி மாவட்ட அலுவலர்கள் எச்.பங்கஜம் (மேலூர்), எம்.முத்தையா (உசிலம்பட்டி), பி.இந்திராணி (திருமங்கலம்), மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், புள்ளியியல் அலுவலர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.