Regional01

வீட்டில் தீ விபத்து ஆவணங்கள் சேதம்

செய்திப்பிரிவு

மதுரை சுப்பிரமணியபுரத்தை அடுத்துள்ள கோவலன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(55). இவரது வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் நேற்று முன்தினம் திடீரென்று தீப்பற்றியது. அங்கிருந்த பீரோவிலும் தீ பரவியது.

இதை அறிந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கிருஷ்ணனின் மகள் கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டுகள், வாகன ஆர்சி புத்தகம், வீடு தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

இது தொடர்பாக சுப்ரமணிய புரம் போலீஸார் விசாரித்தனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

SCROLL FOR NEXT