Regional01

நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் துறைமுகத் தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு

செய்திப்பிரிவு

நாளை (நவ.26) நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடி துறைமுகத் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

விவசாய மசோதாக்களை கைவிட வேணடும். கரோனாவால் பாதிக்கப்பட்ட முறைசாரா தொழிலாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துறைமுகங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவம்பா் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மத்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்வது தொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துறைமுக லேபர் டிரஸ்டிகள் ஆர்.ரசல், சங்கரலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நாளை (நவ.26) நடைபெறும் பொதுவேலைநிறுத்தத்துக்கு துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள், போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 26-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கும் வேலைநிறுத்தத்தில் 3 சிப்ட் தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் மறுநாள் காலை 6 மணிவரை வேலைநிறுத்தம் நடைபெறும், எனவும், இதனால் துறைமுகத்தில் எந்தப் பணியும் நடைபெறாது என்றும் தொழிற்சங்கத் தலைவர் கள் தெரிவித்தனர்.

நவம்பர் 26-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கும் வேலைநிறுத்தத்தில் 3 சிப்ட் தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.

SCROLL FOR NEXT