Regional02

வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

செய்திப்பிரிவு

சேத்துப்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சேத்துப்பட்டு அடுத்த நரசிங்க புரம் கிராமத்தில் வசிப்பவர்ஸ்டீபன் பெர்னாட். இவர், தேவிகா புரத்தில் உள்ள தேசிய மயமாக் கப்பட்ட வங்கியில் நேற்று 4 பவுன் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பெற்றுள்ளார். அந்த பணத்தை, தனது இரு சக்கர வாகன இருக்கையின் பின் பகுதியில் வைத்துவிட்டு, வார சந்தைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது, வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

SCROLL FOR NEXT