கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணைவரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துநீதிபதி பி.வடமலை உத்தர விட்டார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி,தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜம்சீர் அலி மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பி.வடமலை உத்தரவிட் டார். சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.