மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் விஜய சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெண் குழந்தைகளின் பாது காப்பை உறுதி செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சிறப்புக் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் பங்கேற்கலாம்.
பெண் குழந்தைகளின் பாது காப்பு பற்றி தங்களுடைய கருத்து களை கட்டுரை வடிவில் எழுதி, ‘மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 21-22, கென்னட் நகர், முத்துப்பட்டி, அழகப்பன் நகர் மதுரை 3’ என்ற முகவரிக்கு நவ.30-க்குள் அனுப்பலாம். சிறந்த கட்டுரைக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.