பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் அருகே தர்ணா நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா கோரிக் கைகளை விளக்கிப் பேசினார்.
இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் மா.விஜயபாஸ்கர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ரா.நூர்ஜஹான், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சந்திரன், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் தூ.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரை ஆற்றினார்.