Regional02

2-வது கணவர் கொலை முதல் கணவர், மகன் கைது

செய்திப்பிரிவு

தேனி மிராண்டாலயன் அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(39). இவர், கணவர் நாகராஜை (53) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தார். தூத்துக் குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த பரமசிவத்தை(58) இரண்டாவது திருமணம் செய்து தேனியில் வசிக்கிறார். தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வருமாறு மகேஸ்வரியிடம் நாகராஜ் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாகராஜ், அவரது மகன் ஜெயசூர்யா(20) ஆகியோர் பரமசிவத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இருவரையும் தேனி போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT