ஓசூர் கெலவரப்பள்ளிஅணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 240 கனஅடியாக சரிவடைந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 240 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, பெங்களூரு நகரம், ஊரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை குறைந்து தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 400 கனஅடியில் இருந்து 240 கனஅடியாக சரிவடைந்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போதைய அணையின் நீர் மட்டம் 40.02 அடி. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 240 கனஅடியாக குறைந்துள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணகிரிக்கு நீர்வரத்து சரிவு
இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள், ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல் பாரூர் ஏரி முழு கொள்ளளவுடன் நிரம்பி உள்ளதால், ஏரிக்கு வரும் 36 கனஅடி தண்ணீர் இணைப்பு ஏரிகளுக்கு கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டுள்ளது.