Regional01

சாத்தான்குளம் இரட்டைக்கொலைஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலையான வழக்கில், காவல் ஆய்வாளர் தர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவலர்கள் முருகன், வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவில், `சிபிஐ விசாரணை முடிந்துவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும். தலைமறைவாக மாட்டோம். சாட்சிகளைக் கலைக்கமாட்டோம். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவோம்’ எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக கால அவகாசம் கோரியதால், விசாரணையை நவ.25-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தர விட்டார்.

SCROLL FOR NEXT